உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியதாக இருக்கின்றது.

உண்ணும் உணவும் உணவு பழக்கவழக்கங்களுமே உடல் நலத்தை தீர்மானிக்கின்றன .

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

அல்சர்குடல்புண் பிரச்சனைதீர சில எளிய வழிமுறைகள்.

 


                  அல்சர்

என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள் . இந்த புண்கள் உணவை தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து இரைப்பையின் சுவற்றில் புண்கள் உண்டாகி அதன் மூலம் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.

                             குடல் புண் என்னும் அல்சர் அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தாலும் வரும். இந்த அல்சர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

  அல்சர் பிரச்சனைக்கான சில எளிய முறைகள்.

   1.தேங்காய்_பால் :

   அல்சர் இருப்பவர்கள் தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.

 2.ஆப்பிள்_ஜூஸ் :

  தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜீஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம்.

3. வேப்பிலை :

  கொளுந்து வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்ததுக்கு அப்புறம் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

4. முட்டைகோஸ்:

  அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் அல்சரை குணமாக்கலாம்.

 5. அகத்திக்கீரை:

  அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர் சீக்கிரம் நீங்கும்.

6. வெங்காயம்:

 அல்சரால் கடுமையான வயிற்று வலியை சந்தித்தால் பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு உட்கொள்ளுங்கள் இதன் மூலம் அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

7. பீட்ரூட்_ஜுஸ் :

  பீட்ரூட் கூட அல்சருக்கு நல்ல நிவாரணம் தரும். அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் செய்து தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

8. பாகற்காய் :

    பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வர விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து தினமும் 1 டீஸ்பூன் பாகற்காய் பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

8. நெல்லிக்காய்:

  வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய் , அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

9. மணத்தக்காளி_கீரை:

  மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல் சருக்கு மிகவும் நல்லது எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை ட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.

சூடான நீர்  குடிப்பதனால்  இவ்வளவு நன்மையை?

செவ்வாய், 11 அக்டோபர், 2022

சக்கரை நோயாளியின் விரலைவெட்டவேண்டாம்

விரலைவெட்டவேண்டாம்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு 

மருத்துவாிடம் சென்றால்,

.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால் 

காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்

அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை 

இதற்க்கு கண்கண்ட மருந்து .

#ஆவாரம்_இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிா்ந்து பலாின் 

கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.! 

வியாழன், 6 அக்டோபர், 2022

சூடான நீர் குடிப்பதனால் இவ்வளவு நன்மையை?



             ஜப்பானிய மருத்துவர்களின் குழு சில உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சூடான நீர் 100% பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது:

  1 ஒற்றைத் தலைவலி

  2 உயர் இரத்த அழுத்தம்

  3 குறைந்த இரத்த அழுத்தம்

  4 மூட்டு வலி

  5 இதயத்துடிப்பில் திடீர் அதிகரிப்பு மற்றும் குறைவு

  6 வலிப்பு நோய்

  7 கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தது

  8 இருமல்

  9 உடல் அசௌகரியம்

  10 வலி கோலு

  11 ஆஸ்துமா

  12 பெர்டுசிஸ்

  13 நரம்புகளை வெண்மையாக்கும்

  14 கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்கள்

  15 வயிற்று பிரச்சனைகள்

  16 மோசமான பசி

  17 மேலும் கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

  18 தலைவலி


  சூடான நீரைப் பயன்படுத்துவது எப்படி?

  அதிகாலையில் எழுந்து உங்கள் வயிறு காலியாக இருக்கும்போது 4 கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவும்.  நீங்கள் முதலில் 4 கண்ணாடிகள் குடிக்க முடியாது ஆனால் காலப்போக்கில் நீங்கள் அங்கு வருவீர்கள்.

  குறிப்பு: தண்ணீர் எடுத்த 45 நிமிடங்களுக்குள் எதையும் சாப்பிட வேண்டாம்.

  சூடு நீர் சிகிச்சை உடல்நலப் பிரச்சினைகளை சரியான நேரத்தில் தீர்க்கும்:

  ✔ 30 நாட்களில் நீரிழிவு

  ✔ இரத்த அழுத்தம் 30 நாட்களில்

  ✔ 10 நாட்களில் வயிற்று பிரச்சனை

  ✔ அனைத்து வகையான புற்றுநோய்களும் 9 மாதங்களில்

  ✔ 6 மாதங்களில் * நரம்புகளை வெண்மையாக்கும்

  ✔ 10 நாட்களில் குறைந்த பசி

  ✔ கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள் 10 நாட்களில்

  ✔ நாசி, காது மற்றும் தொண்டை பிரச்சனை 10 நாட்களில்

  ✔ பெண்களின் மாதவிடாய் பிரச்சனை 15 நாட்களில்

  ✔ 30 நாட்களில் இதய நோய்

  ✔ 3 நாட்களில் தலைவலி / மைக்ரேன்

  ✔ 4 மாதங்களில் கொலஸ்ட்ரால்

  ✔ 9 மாதங்களில் தொடர்ந்து கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம்

  ✔ 4 மாதங்களில் ஆஸ்துமா


  குளிர்ந்த நீர் உங்களுக்கு மோசமானது.

  இளமையில் குளிர்ந்த நீர் உங்களைப் பாதிக்கவில்லை என்றால், வயதான காலத்தில் அது உங்களைத் தாக்கும்.

  * குளிர்ந்த நீர் 4 இதய நரம்புகளை மூடி, மாரடைப்பை ஏற்படுத்துகிறது.  மாரடைப்பு வருவதற்கு குளிர் பானங்கள் முக்கிய காரணம்.

  * கல்லீரலில் பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.  இது கொழுப்பை கல்லீரலில் ஒட்ட வைக்கிறது.  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெரும்பாலானோர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதால் பலியாகின்றனர்.

  * குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது.  இது பெரிய குடலை பாதித்து புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

  தயவு செய்து இந்த தகவலை உங்களுக்கே வைத்துக்கொள்ளாதீர்கள்.

 அதை மற்றவர்களுக்குக் கடத்தச் சொல்லுங்கள்.

 இது ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்.

 பெறப்பட்டது போல் முன்னனுப்பப்பட்டது.... 

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில.

  


நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில.

இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே யூஸ் பண்றோம்.

ஆனால் பாருங்க இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று!!!!!

நோய்களை  நீக்குவதில்  இஞ்சிசமையலறை மருத்துவர்!

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 


உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

        உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

         இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

  1. இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
  2. கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
  3. சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.
  4. உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
  5. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.
  6. பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  7. ஆண்கள் க்கு ஏற்படும் நரம்பு தளர்சி  தளர்வுத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
  8. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  9. கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்...

புதன், 7 செப்டம்பர், 2022

தூதுவளைக் கீரையின் பயன்கள்

 


தூதுவளைக் கீரையின் பயன்கள்

                   தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு சீரகம் சேர்த்து தாளித்து துவையலாக செய்து  சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தால்

               தொண்டை மற்றும் நுரையீரலில் தேங்கி நிற்கும் சளி நீங்கிவிடும் நாடி நரம்புகள் வலிமை அடையும் இதன் மூலம் உடலுக்கு பலம் அதிகரிக்கும் அறிவில் தெளிவும் புத்தியில் சிந்தனை திறனும் உண்டாகும்

தூதுவளை கீரையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால்

                     நுரையீரல் கோளாறு புற்றுநோய் சயரோகம் ஆஸ்த்துமா டான்சில் தைராய்டு கட்டிகள் கண்ணம் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் எழுச்சிக் கட்டிகள் தொண்டைக்கட்டு வாய்வு கோளாறு ஞாபக சக்தி குறைபாடு உடல் பலவீனம் சத்து பற்றாக்குறை போன்ற நோய்கள் உடலில் தோன்றாது

மேலும்

            மூளை நரம்புகள் பலம் பெறுவதால் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கீரையை சாப்பிட்டு வருவோருக்கு அதிகமான அறிவு வளர்ச்சி உண்டாகும் இது உறுதி

      அறிவு வளர்ச்சியை அதிகமாக தரும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதாலே இந்த கீரையை ஞான மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இதற்கு சான்றாகும்


தூதுவளை கீரையில் மூலம்    சில எளிய வைத்திய முறைகள்

தூதுவளை இலை சாறுடன் சம அளவு நெய் சேர்த்து இலேசாக காய்ச்சி இதில் இரண்டு ஸ்பூன் தினந்தோறும் காலை வேளையில் சாப்பிட்டு வர எலும்புருக்கி நோய் குணமாகும் மேலும் காய்ச்சல் மார்பு சளி போன்ற நோய்கள் நீங்கும்

மூச்சு திணறல் குணமாக

  தூதுவளை கீரையின் வேர் இலை பூ காய் தண்டு இவைகளை சம அளவாக சேகரித்து காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதில் இரண்டு ஸ்பூன் எடுத்து நானூறுமில்லி தண்ணீரில் கலந்து நூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி

     இதை காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள்பருகி வர இரைப்பு நோய் சுவாசகாசம் மூச்சுத்திணறல் சளி போன்ற கப நோய்கள் அனைத்தும் குணமாகும்

முக வசீகரம் உண்டாக

   தூதுவளை பூவை பதினைந்து எடுத்து பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி இதை தினந்தோறும் குறைந்தது ஒரு மண்டல காலம்  தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் பலம் அதிகரிக்கும் முக வசீகரம் ஏற்படும் அழகும் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் கூடும்

ஆண்மை சக்தி உண்டாக

   தூதுவளை பூவுடன் சமமாக யானை நெருஞ்சில் பூவையும் சேர்த்து   பசும் பாலில் கலந்து காய்ச்சி இதை காலை வேளையில் பருகிவர ஆண்மை சக்தி உண்டாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

விச காய்ச்சலை குணமாக்கும்

    தூதுவளை கசாயம்

  தூதுவளை கண்டங்கத்திரி பற்படாகம் விஷ்ணுகிரந்தி இவைகளை வகைக்கு ஒரு கைப்பிடி அளவு பறித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரேநூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி

  ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சிறியவர் என்றால் ஐந்து மில்லி அளவும் பெரியவர்களுக்கு 100 மில்லியளவும் சாப்பிட்டுவர நிமோனியா டைப்பாய்டு போன்ற காய்ச்சல் குளிர் காய்ச்சல் மற்றும் விஷ கிருமி தொற்றால் ஏற்படும் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்

ஆஸ்துமா குணமாக

 தூதுவளை இலை

கண்டங்கத்திரி இலை

திப்பிலி

இண்டு வேர்

    இவைகளை சம அளவாக பொடி செய்து இதில் 5 கிராம் எடுத்து 400 மில்லி தண்ணீரில் கலந்து இதை 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறுகள் நீங்கும்

தீராத சளி மற்றும் மூக்கடைப்பு குணமாகும்

மேலும்

  தூதுவளைக் கீரையை இடித்து சாறு பிழிந்து இதில் ஐம்பது மில்லி  எடுத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயால் ஏற்படும் சளி மற்றும் இருமல் மேலும் மூச்சுத்திணறல் போன்ற கபம் நோய்கள் அனைத்தும் விலகும்

நுரையீரல் வலிமை பெற

  தூதுவளை காயை சேகரித்து மோரில் ஊற வைத்து இதை வெயிலில் விட்டு வர்களாக உலர்த்தி பணிக்காலம் மற்றும் மழை காலங்களில் இதை நல்லெண்ணெயில் பொறித்து சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் தொந்தராவல் ஏற்படும் சுவாச தடைகள் நீங்கும்

மேல்மூச்சு கீழ்மூச்சாக வாங்கும் இரைப்பு நோய் விலகும் நுரையீரல் வலிமை பெறும்

சளி இருமல் குணமாக

  தூதுவளையை பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை  சாப்பிட்டு வர சளி இருமல் போன்ற கப நோய்கள் விலகும் மேலும் தூதுவளை பொடியை   தொடர்ந்து பயன்படுத்தி வர சர்க்கரை நோய்  கட்டுப்பாட்டில் இருக்கும்

இருமல் குணமாக

  தூதுவளை இலை திப்பிலி இவை இரண்டையும் சம அளவாக பொடி செய்துகொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து தேனுடன் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர ஒரு வார காலத்தில் தீராத இருமல் தீரும்

பித்தமயக்கம் குணமாக

  தூதுவளை இலைப் பொடியை மூன்று கிராம் எடுத்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர பித்த மயக்கம் நீங்கும் மேலும் பித்த நோய்கள் அனைத்தும் விலகும்

  தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி வரும் நாட்களில் உணவில் புளியை குறைத்து கொள்ள வேண்டும்..