உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியதாக இருக்கின்றது.

உண்ணும் உணவும் உணவு பழக்கவழக்கங்களுமே உடல் நலத்தை தீர்மானிக்கின்றன .

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில.

  


நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில.

இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே யூஸ் பண்றோம்.

ஆனால் பாருங்க இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று!!!!!

நோய்களை  நீக்குவதில்  இஞ்சிசமையலறை மருத்துவர்!

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 


உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

        உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

         இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

  1. இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
  2. கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
  3. சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.
  4. உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
  5. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.
  6. பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  7. ஆண்கள் க்கு ஏற்படும் நரம்பு தளர்சி  தளர்வுத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
  8. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  9. கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்...

புதன், 7 செப்டம்பர், 2022

தூதுவளைக் கீரையின் பயன்கள்

 


தூதுவளைக் கீரையின் பயன்கள்

                   தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு சீரகம் சேர்த்து தாளித்து துவையலாக செய்து  சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தால்

               தொண்டை மற்றும் நுரையீரலில் தேங்கி நிற்கும் சளி நீங்கிவிடும் நாடி நரம்புகள் வலிமை அடையும் இதன் மூலம் உடலுக்கு பலம் அதிகரிக்கும் அறிவில் தெளிவும் புத்தியில் சிந்தனை திறனும் உண்டாகும்

தூதுவளை கீரையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால்

                     நுரையீரல் கோளாறு புற்றுநோய் சயரோகம் ஆஸ்த்துமா டான்சில் தைராய்டு கட்டிகள் கண்ணம் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் எழுச்சிக் கட்டிகள் தொண்டைக்கட்டு வாய்வு கோளாறு ஞாபக சக்தி குறைபாடு உடல் பலவீனம் சத்து பற்றாக்குறை போன்ற நோய்கள் உடலில் தோன்றாது

மேலும்

            மூளை நரம்புகள் பலம் பெறுவதால் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கீரையை சாப்பிட்டு வருவோருக்கு அதிகமான அறிவு வளர்ச்சி உண்டாகும் இது உறுதி

      அறிவு வளர்ச்சியை அதிகமாக தரும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதாலே இந்த கீரையை ஞான மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இதற்கு சான்றாகும்


தூதுவளை கீரையில் மூலம்    சில எளிய வைத்திய முறைகள்

தூதுவளை இலை சாறுடன் சம அளவு நெய் சேர்த்து இலேசாக காய்ச்சி இதில் இரண்டு ஸ்பூன் தினந்தோறும் காலை வேளையில் சாப்பிட்டு வர எலும்புருக்கி நோய் குணமாகும் மேலும் காய்ச்சல் மார்பு சளி போன்ற நோய்கள் நீங்கும்

மூச்சு திணறல் குணமாக

  தூதுவளை கீரையின் வேர் இலை பூ காய் தண்டு இவைகளை சம அளவாக சேகரித்து காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதில் இரண்டு ஸ்பூன் எடுத்து நானூறுமில்லி தண்ணீரில் கலந்து நூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி

     இதை காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள்பருகி வர இரைப்பு நோய் சுவாசகாசம் மூச்சுத்திணறல் சளி போன்ற கப நோய்கள் அனைத்தும் குணமாகும்

முக வசீகரம் உண்டாக

   தூதுவளை பூவை பதினைந்து எடுத்து பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி இதை தினந்தோறும் குறைந்தது ஒரு மண்டல காலம்  தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் பலம் அதிகரிக்கும் முக வசீகரம் ஏற்படும் அழகும் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் கூடும்

ஆண்மை சக்தி உண்டாக

   தூதுவளை பூவுடன் சமமாக யானை நெருஞ்சில் பூவையும் சேர்த்து   பசும் பாலில் கலந்து காய்ச்சி இதை காலை வேளையில் பருகிவர ஆண்மை சக்தி உண்டாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

விச காய்ச்சலை குணமாக்கும்

    தூதுவளை கசாயம்

  தூதுவளை கண்டங்கத்திரி பற்படாகம் விஷ்ணுகிரந்தி இவைகளை வகைக்கு ஒரு கைப்பிடி அளவு பறித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரேநூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி

  ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சிறியவர் என்றால் ஐந்து மில்லி அளவும் பெரியவர்களுக்கு 100 மில்லியளவும் சாப்பிட்டுவர நிமோனியா டைப்பாய்டு போன்ற காய்ச்சல் குளிர் காய்ச்சல் மற்றும் விஷ கிருமி தொற்றால் ஏற்படும் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்

ஆஸ்துமா குணமாக

 தூதுவளை இலை

கண்டங்கத்திரி இலை

திப்பிலி

இண்டு வேர்

    இவைகளை சம அளவாக பொடி செய்து இதில் 5 கிராம் எடுத்து 400 மில்லி தண்ணீரில் கலந்து இதை 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறுகள் நீங்கும்

தீராத சளி மற்றும் மூக்கடைப்பு குணமாகும்

மேலும்

  தூதுவளைக் கீரையை இடித்து சாறு பிழிந்து இதில் ஐம்பது மில்லி  எடுத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயால் ஏற்படும் சளி மற்றும் இருமல் மேலும் மூச்சுத்திணறல் போன்ற கபம் நோய்கள் அனைத்தும் விலகும்

நுரையீரல் வலிமை பெற

  தூதுவளை காயை சேகரித்து மோரில் ஊற வைத்து இதை வெயிலில் விட்டு வர்களாக உலர்த்தி பணிக்காலம் மற்றும் மழை காலங்களில் இதை நல்லெண்ணெயில் பொறித்து சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் தொந்தராவல் ஏற்படும் சுவாச தடைகள் நீங்கும்

மேல்மூச்சு கீழ்மூச்சாக வாங்கும் இரைப்பு நோய் விலகும் நுரையீரல் வலிமை பெறும்

சளி இருமல் குணமாக

  தூதுவளையை பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை  சாப்பிட்டு வர சளி இருமல் போன்ற கப நோய்கள் விலகும் மேலும் தூதுவளை பொடியை   தொடர்ந்து பயன்படுத்தி வர சர்க்கரை நோய்  கட்டுப்பாட்டில் இருக்கும்

இருமல் குணமாக

  தூதுவளை இலை திப்பிலி இவை இரண்டையும் சம அளவாக பொடி செய்துகொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து தேனுடன் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர ஒரு வார காலத்தில் தீராத இருமல் தீரும்

பித்தமயக்கம் குணமாக

  தூதுவளை இலைப் பொடியை மூன்று கிராம் எடுத்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர பித்த மயக்கம் நீங்கும் மேலும் பித்த நோய்கள் அனைத்தும் விலகும்

  தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி வரும் நாட்களில் உணவில் புளியை குறைத்து கொள்ள வேண்டும்..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு .

 


கிராம்பை தினம் இரண்டு தூங்கும் முன் சாப்பிட்டால் போதும்..!

        இரவில் கிராம்பை உட்கொள்வது இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.

                         உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டிலேயே கிடைக்கும் பல இயற்கை மூலிகை பொருட்களை எடுத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் கிராம்பு உங்கள் உடலில் இம்முனிட்டியை அதிகரிக்க பயன்படுகிறது. அனைத்து இந்திய சமயலறைகளிலும் கிராம்பு என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு வகை இந்திய மசாலா பொருள் ஆகும்.

       இது ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. விஞ்ஞான ரீதியாக கிராம்பு சைஜீஜியம் அமோடிகம் என அழைக்கப்படுகிறது. இதுதவிர கிராம்பு ஆயுர்வேதத்தில் அவற்றின் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராம்பினை தவறாமல் பயன்படுத்தும் போது, அவை வயிற்று வியாதிகளிலிருந்தும் பல் மற்றும் தொண்டை வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவும்.

         கிராம்பில் உள்ள யூஜெனோல் என்ற பொருள் தான் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இதுதவிர இந்த சிறிய மசாலா பொருள் பார்கின்சன் நோயைத் தடுக்க உதவும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் டோபமைன் (Dopamine) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் பார்கின்சன். நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பாதிப்பான இது, தசை இயக்கத்தை பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும்.

இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை

 


               பொதுவாக இந்த நோய் வயதானர்களிடையே காணப்படும். அதுவே நீங்கள் அன்றாடம் கிராம்பு எடுத்துக்கொண்டால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். கிராம்பில், வைட்டமின் , வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் , தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த மருத்துவக்குணம் கொண்ட மூலிகையை உணவில் சேர்க்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இந்த ஒரு வழிமுறையை கடைப்பித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளோ ஏராளம். அவை என்ன என்பதை பற்றி விரிவாக பாப்போம்.

கிராம்புகளை உட்கொள்வதற்கான சிறந்த வழி :

          படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு பின்வரும் சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம்.

1. இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவும். இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

2. கிராம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பது மட்டுமல்லாமல் இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. மேலும், இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளது.

3. கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வதன் மூலம் பல்வலியை தவிர்க்கலாம். அல்லது பல் வலியிருக்கும் இடத்தில் ஒரு கிராம்பை வைக்கலாம். இது வலி நிவாரணியாகவும் செயல்படும்.

4. தொண்டை புண் மற்றும் தொண்டை வலியைப் போக்க கிராம்பு உதவும்.

5. கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் 1 முதல் 2 கிராம்புகளை உட்கொள்ளவதன் மூலம் பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

6. தினமும் கிராம்பை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

7. இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.