சனி, 3 செப்டம்பர், 2022

சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

 


சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

பழங்காலம் முதலாக உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் தான் தேன். இத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குறிப்பாக இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இங்கு தேன் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தொண்டைப் புண்:

தொடர்ச்சியாக வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, காய்ச்சலில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் இது தொண்டையில் இருக்கும் புண் மற்றும் வறட்டு இருமலையும் தடுக்கும்.

உடல் சுத்தம்:

தேன் கலந்த நீரில் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும் மற்றும் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்தும். அதிலும் அத்துடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், இன்னும் சிறப்பான முறையில் ஒட்டுமொத்த உடலும் சுத்தமாகும்.

நோயெதிர்ப்பு சக்தி:

தேன் கலந்த நீரில் நொதிகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக இருக்கும். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.

அலர்ஜி:

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தொடர்ச்சியாக குடித்து வரும் போது, அலர்ஜி வருவதைத் தடுக்கலாம்.

இதய ஆரோக்கியம்:

தேன் கலந்த நீரைக் குடித்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோயின் அபாயத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

1 .தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.

2. மாதுளம் பழச்சாறுடன் (Pomegranate fruit) தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.

3.எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.

4. இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.

5.ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.

 6. ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.

7. நெல்லிக்காயுடன் (Indiangosseberry) தேன் கலந்து சாப்பிட 'இன்சுலின்' சுரக்கும்.

8. கேரட்டுடன் தேன்(Honey) கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.

     தேன் பூக்களுக்கு ஏற்ப நிறம், சுவை, மணம் மாறுபடும்.

நாவல் தேனின் பயன்கள்:

 1.இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.

2.நோய் எதிர்ப்பு சக்தி! உடல் சூட்டை தணிக்கும்!

 3சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் காலை மாலை இந்த வகை தேனை உண்டு வந்தால் விரைவில் இரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

4.மூன்று மாதம் தொடர்ந்து நாவல் தேனை உண்டு வந்தால் மூட்டு வலி குணமாகும், மற்றும் சிறுநீரக நோய், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

முருங்கைத் தேனின் பயன்கள்:-

1. இல்லற வாழ்வு சிறக்க முருங்கைதேன் முக்கிய பங்கு ஆற்றுகிறது....

2.ஆண்களுக்கு நீண்ட பலத்தை அளிக்கிறது,

3.விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது,

4.பெண்களின் கர்ப்பபை யை பலபடுத்தி குழந்தை பேறு அளிக்கிறது...

 வேப்பம் பூ தேனின் நன்மைகள் :

* இரத்தத்தை சுத்திகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுதுகிறது.

* புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டது ,புற்று நோய்  மேலும் பரவாமல் தடுக்கிறது.

* குடலில் உருவாகும் பூச்சிகளை அளிக்க வல்லது , குழந்தைகளுக்கு ஏற்ற தேன் இது ஆகும் .

* தேன்களிலே முதன்மையானது வேம்பு தேன்   என சித்தர்களால் அருளப்பட்டது .

* சர்க்கரை நோயாளிகள் தினமும் 10ml வீதம் வேம்புத் தேன் உண்டு வந்தால் விரைவில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.

* தினமும் வேம்புத் தேன் சாப்பிடும்  போது சிறுநீரக நோய் மற்றும் கண் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது .

சாப்பிடும் முறை:

தினமும் காலை மாலை 1 ஸ்பூன் தேன், பாலுடன் கலந்து உணவிற்கு முன் சாப்பிடுவது சிறந்தது..

   இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு உலகில் இன்னும் இல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக