பொதுவாகவே
மீன்கள் உடலுக்கு நன்மை பயக்கும். அதிலும்
குறிப்பாகக் கொலஸ்ட்ரால் (கொழுப்பு) உள்ளவர்களுக்கு அதிகப் படியான நன்மை
தருகிறது. பொதுவாகக் கொலஸ்ட்ரால் பாதிக்கப்பட்டவர்கள் இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது. கொலஸ்ட்ரால் (கெட்ட
கொழுப்பு) பாதிக்கப்பட்டவர்கள் அசைவப் பிரியர்களாக இருப்பின்
இறைச்சிக்கு மாற்றாக உணவில் மீனைச்
சேர்த்துக் கொள்ளலாம். நல்ல கொழுப்பு உள்ள
ஒரே கடல் உணவு என்றால்
அது மீன் மட்டும் தான்.
மீன் உணவை அதிகம் உட்கொள்வதால்
கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் படிவதைத் தவிர்க்கலாம்.
மீன்களில் பாரம்பரியமான வகைகளும், சாலமன் மற்றும் டுனா
போன்ற மீன்களும் கெட்ட கொழுப்பின் அளவைக்
குறைக்கும் தன்மையுள்ளது. தாய்மார்களுக்கு மீன் உணவு மிகவும்
நல்லது.
மீனில்
நல்ல கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது.
எனவே மீன் உண்பதால் நம்
உடலில் நல்ல கொழுப்பின் அளவு
அதிகரித்து கெட்ட கொழுப்பின் அளவைக்
குறைக்க முடியும்.
உடலில்
சேரும் கெட்ட கொழுப்பின் மூலம்
மிகவும் பாதிக்கப்படுவது இதயம் தான். எனவே
கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான
வாய்ப்புகள் மிக அதிகம். வாரத்திற்கு
இரு முறை மீனை உணவில்
சேர்ப்பதன் மூலம் இதயம் பாதுகாக்கப்
படுகிறது. மீனை மட்டுமல்லாமல் மீனிலிருந்து
எடுக்கப்படும் மீன் எண்ணெய் அதிக
மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மீன் இதயத்திற்கு ஏற்ற
அரிய உணவு என்று அறிவியல்
அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மீன் எண்ணெயில் செறிவுரா
கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்களும்
அடங்கியுள்ளன.
இரத்தக்
குழாய்களில் படிந்து உள்ள லிப்பிடுகளைக்
(கொழுப்பினைக்) குறைக்கவும், தமனிகளில் (Arteries) இரத்தம் உறைவதத் தடுக்கவும்
மீனிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் உதவுகிறது.
மேலும் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருப்பதால், உடலில்
பயன்படுத்தாத கலோரிகளால் உருவாக்கப்படும் டிரைகிளிசரைடுகளின் அளவினை பெரும்பாலும் குறைக்கிறது.
தாவர எண்ணெய் பயன்படுத்துபவர்களின் உடலில் உள்ள
கொழுப்பினை விட (கொலஸ்ட்ராலை விட)
மீன் எண்ணெய் பயன்படுத்தியவர்களின் உடலில் உள்ள
கொழுப்பின் அளவு குறைவ
மேலும்
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acids) அனைத்து மீன்களிலும் குறிப்பிடத்தக்க
அளவில் உள்ளது. ஆனால், சால்மன்,
கானாங்கெழுத்தி, வஞ்சிரம் மற்றும் மத்தி போன்ற
மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது
அதிகளவில் உள்ளது.
எனவே அதிக கெட்ட கொழுப்பினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மீன் உணவு ஒரு
வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது
.jpg)






0 கருத்துகள்:
கருத்துரையிடுக