வியாழன், 25 மே, 2023

தேங்காய் பால் தரும் நன்மைகள்!!*

                                   

*Coconut Milk Benefits:

தேங்காய் பால் தரும் நன்மைகள்!!*_

தேங்காய் பாலில் உடல் பலத்திற்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் சி, விட்டமின் , பி1, பி3,பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

தேங்காய் பாலில் இருக்கும் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும்.

எனவே இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள அதனை விரைவில் குறைக்கலாம்.

தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது.

இது மாங்கனீசு குறைபாட்டால் உடலில் வரும் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த உதவுகிறது.

காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது. உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் மீள் திறனுடன் வைத்திருக்கும்.

உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. தேங்காய் பாலில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் தேங்காய் பால் எடுத்துக்கொண்டால், இரும்புச்சத்து குறைபாடு தடுக்கப்படும்.

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற நோய் வராமல் தவிர்க்கும், இதில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படும்போது, உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

உடல் எடையை குறைக்க முயற்ச்சி செய்பவர்கள் தேங்காய் பால் எடுத்துக்கொண்டால் நல்ல பலன் அடையலாம். ஏனெனில் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும்.

தேங்காய் பாலில் செலினியம் அதிகம் உள்ளது.செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

*நன்மைகள் :*

தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது. கர்ப்பிணிகளுக்கு இது நல்லது.

தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது.

தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலமானது எளிதாக உறிஞ்சப்படுவதுடன், உடலுக்கு தேவையான ஆற்றலினை தருகிறது. ஆண்மையை அதிகரிக்க உதவும்.

தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால் , அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் பால் உட்கொள்வதால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை சீராக்கி மாரடைப்பு வருவதை குறைக்கிறது.

மேலும், உடலில் உள்ள கொழுப்பினை குறைத்து, தசைகளை வலிமைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியமானது உடைந்த செல்களை சரி செய்கிறது.

தேங்காய் பால் உடலின் செரிமான மண்டலம் சீர்செய்து உடல் நலத்தினை மேம்படுத்துகிறது.

தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும்.

மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய் பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

சரும எரிச்சல், சொரியாசிஸ், பக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு தேங்காய்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்க தேங்காய் பாலை தலையின் அடிமுதல் நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் பால் ஒரு சிறந்த கண்டிஷனர். இதை பயன்படுத்தும் ஷாம்புவுடன் சரிபாதி அளவு கலந்து குளித்தால் கூந்தலுக்கு நல்லது.

வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத்தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.

குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகிறது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக